பாளையம்பட்டி சுப்பாஞானியார் கோவிலில் அன்னாபிஷேகம்

சத்குரு  ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய (ஜீவ சமாதி) திருக்கோவிலில் புதன்கிழமை ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுடன் பாரம்பரிய முறையில்  அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய கோவிலில் ஐப்பசி பெüர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டையடுத்து சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் நமச்சிவாயர்.
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய கோவிலில் ஐப்பசி பெüர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டையடுத்து சிறப்பு அன்னாபிஷேக அலங்காரத்தில் நமச்சிவாயர்.
Updated on
1 min read

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம்  அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் சத்குரு  ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய (ஜீவ சமாதி) திருக்கோவிலில் புதன்கிழமை ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டுடன் பாரம்பரிய முறையில்  அன்னாபிஷேகம் நடைபெற்றது.

பாளையம்பட்டியில் சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் அடங்கிய (ஜீவசமாதி) திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை ஆயிரவைசிய காசுக்காரச்செட்டியார் வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கோவிலில் ஐப்பசி பெளர்மணியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன்படி புதன்கிழமை காலை கருவறையில் உள்ள அருள்மிகு நமச்சிவாயருக்கு பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதுடன், தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து பாரம்பரிய முறைப்படி ஐப்பசி பெளர்ணமி நன்னாளை முன்னிட்டு அங்குள்ள நமச்சிவாயருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற்றது.இந்த அன்னாபிஷேகத்தால் உலக நன்மையும்,தட்டுப்பாடின்றி உணவு உள்ளிட்ட சகல செல்வங்களும் கிடைக்குமென்பது நம்பிக்கை.

இந்நிகழ்ச்சியில் சுமார் 600க்கு மேற்பட்டோர் உரிய சமூக இடைவெளியுடன் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com