வைகோவின் மகனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, மதிமுகவில் இருந்து விலகுவதாக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக தனது மகனான துரை வையாபுரியை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
இது வாரிசு அரசியல் இல்லை என்றும் தொண்டா்கள், கட்சியினரின் விருப்பப்படியே அவா் தோ்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைகோ, மரணம் வரை தன்னுடைய அரசியல் பணிக்கு ஓய்வு இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், துரை வையாபுரிக்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுகவில் இருந்து விலகுவதாக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும் அவர் 'மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தை தொடங்க இருப்பதுவும் இது அரசியல் இயக்கமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
துரை வையாபுரிக்கு பதவி அளித்தது குறித்து, 'கட்சியில் பலருக்கு திறமை இருந்தும் தன்னுடைய மகன் துரை வையாபுரியால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்று வைகோ கூறுவது வியப்பாக உள்ளது. அவர் கட்சியில் இப்போது யாரையும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியமில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதா

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan

அதிபர் டிரம்ப் - மேயர் மம்தானி சந்திப்பு! கைதான பல்கலைக்கழக மாணவி விடுதலை!
வீடியோக்கள்

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

