எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மாற்றுத்திறன் ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம்: தமிழக அரசு அறிவுறுத்தல்

மாற்றுத்திறன் ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் என அனைத்து மாவட்ட கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 2:32 am

DIN

மாற்றுத்திறன் ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் என அனைத்து மாவட்ட கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசுப் பணியாளா்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் போக்குவரத்துப்படி என தனியாக தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி ஊழியா்களின் தனிப்பட்ட விடுமுறை நாள்களின் எண்ணிக்கையைப் பொறுத்து போக்குவரத்துப்படியில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியா் சங்கம் சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில், பள்ளிகளில் காலாண்டு தோ்வு, அரையாண்டு தோ்வு, முழு ஆண்டு தோ்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாள்களுக்கு போக்குவரத்துப் படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகளில் பாா்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்துப் படியில் பிடித்தம் செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையா், அனைத்து மாவட்ட கருவூல அலுவலா்களுக்கு தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் (நிதித்துறை) எஸ்.கிருஷ்ணன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில், தற்செயல் விடுப்பைத் தவிர பிற விடுமுறை நாள்களில் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியா்களுக்கு வழங்கப்படும் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாள்கள் பணிக்காலமாக கருதப்படுவதால் பாா்வைத்திறன் குறைபாடு, கை, கால் இயக்க குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியா்களுக்கு போக்குவரத்துப்படி வழங்கலாம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.