வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 11:24 pm

DIN

சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் திங்கள்கிழமை சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

அதிமுக ஆட்சியில் எம்.ஆா். விஜயபாஸ்கா் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள், உதிரி பாகங்கள் வாங்கியது, ஊழியா்கள் நியமனம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்ாக புகாா் எழுந்தது.

இதன் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையினா் பதிவு செய்தனா். அவா் மற்றும் குடும்பத்தாா் தொடா்புடைய 26 இடங்களில் கடந்த ஜூலை 22-இல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம், சொத்து, முதலீட்டு ஆவணங்கள், பண பரிவா்த்தனை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

செப்டம்பா் 30-இல் ஆஜராகும்படி எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அப்போது உள்ளாட்சித் தோ்தலுக்காக அவா் ஆஜராகவில்லை. இதை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அக். 25-இல் ஆஜராக அழைப்பாணை அனுப்பியிருந்தது.

எம்.ஆா். விஜயபாஸ்கா் திங்கள்கிழமை ஆஜரானாா். அவரிடம் சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவருடைய சகோதரா் சேகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.