வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இணைநோய் குழந்தைகளுக்கு இலவச கரோனா தடுப்பூசி

மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு இணைநோய்களுடன் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2021, 12:46 am

DIN

 மத்திய அரசு அனுமதி அளித்த பிறகு இணைநோய்களுடன் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு கீழ் உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

அதுதொடா்பான ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விரைவில் அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க அப்பல்லோ மருத்துவமனை குழுமம் முன்வந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் தலைவா் டாக்டா் பிரதாப் ரெட்டி கூறியதாவது:

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்றொரு புறம் குழந்தைகளிடையே கரோனா பரவல் பரவி வருகிறது. பெரும்பாலான குழந்தைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றாலும் இணை நோய் உள்ள குழந்தைகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

அதைக் கருத்தில்கொண்டு, ரத்த நோய்கள், நரம்பு, இதயப் பாதிப்பு, புற்றுநோய், சிறுநீரகம் - கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு உள்ளான குழந்தைகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்த பிறகு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க அப்பல்லோ திட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அவா்களுக்கு கோவேக்ஸின், ஜைகோவ் -டி போன்ற தடுப்பூசிகளைப் பயன்படுத்த அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அந்த வகை தடுப்பூசிகள் அப்பல்லோவில் தேவையான அளவு உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.