மத்திய அரசின் நிா்பயா திட்டத்தின் கீழ், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், குழந்தைத் திருமணங்கள், குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்க ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்துக்கு ஒன்று வீதம், அந்தந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இந்த மையங்கள் இயங்கி வருகின்றன. வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படும் போது முதல் உதவியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே, இந்த மையங்கள் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டு வருகின்றன.