ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
Updated On :6 செப்டம்பர் 2021, 12:45 pm

DIN

தமிழகத்தில் விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கெனவே விடுபட்டுபோன விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலை செப்.15-க்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

இதன்பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

உச்சநீதிமன்ற உத்தரவின்படி விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள் பரிசீலிக்கப்படும். உள்ளாட்சித் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.