பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவிப்புகள்..

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பயனுள்ள பல அறிவிப்புகள் இன்று பேரவையில் வெளியிடப்பட்டன.
பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவிப்புகள்..
பட்டு விவசாயிகளுக்கு பயனுள்ள அறிவிப்புகள்..
Published on
Updated on
1 min read

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பயனுள்ள பல அறிவிப்புகள் இன்று பேரவையில் வெளியிடப்பட்டன.

பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருள்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டன.

அமைச்சர் தா.மோ. அன்பரசன் வெளியிட்ட அறிவிப்பின் முக்கியம்சங்கள்..
ரூ.5.25 கோடி மதிப்பில் வெண்பட்டு கூடுகளின் தரத்தை அதிகரிக்க 1000 பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.

300 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித் தொகை வழங்கப்படும்.

200 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு மல்பெரித் தோட்டங்களில் வேலையாள்கள் பயன்பாட்டினைக் குறைத்து தோட்டப் பராமரிப்புப் பணிகளை எளிதாக்க பவர் டில்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

ரூ.2.42 கோடி மதிப்பில் பட்டு வளர்ச்சித் துறையின் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்.

ரூ.82 லட்சத்தில் 14 அரசு பட்டுப்பண்ணைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் இளம்புழு வளர்ப்பு மையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com