மன்னார்குடியில் தலைமறைவு வாழ்க்கை நடத்திய இடத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகாகவி பாரதியார் தலைமறைவாக இருந்த இடத்தில் அமைப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு,
மன்னார்குடி அடுத்த மேல நாகை மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
மன்னார்குடி அடுத்த மேல நாகை மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள்.
Published on
Updated on
1 min read

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மகாகவி பாரதியார் தலைமறைவாக இருந்த இடத்தில் அமைப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, சனிக்கிழமை பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆங்கில அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காக,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த கொடியாலம் வா.ரெங்கசாமி ஐயங்காருக்கு சொந்தமான பங்களா மன்னார்குடி அடுத்த மேலநாகையில் உள்ளது. இங்கு மாறுவேடத்தில் வந்த பாரதியார் 10 நாள் தங்கியிருந்துள்ளார்.

அந்த காலக் கட்டத்தில் தான்,பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் பாரத நாடு என்ற பாடல் கருக்கொண்டதாக வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பங்களா,பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது.இதனையடுத்து,பாரதியார் நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அதன் மூலம், அந்த பங்களாவை சீரமைக்கப்பட்டதுடன் அங்கு பாரதியார் சிலையுடன் கூடிய மகாகவி பாரதியார் நினைவு மண்டபமும் அமைக்கப்பட்டது.

இதனை, கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் காந்தியவாதியும் பாரதியார் பற்றாளருமான குமரிஅனந்தன் திறந்து வைத்தார்.

பாரதியார் நினைவு மண்டபத்தில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளின் போது இலக்கிய அமைப்புகள், கட்சிகள், பொதுநல அமைப்பினர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பதும். இலக்கிய மற்றும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெற்று வருகிறது.

மகாகவி பாரதியார் 100 ஆவது நினைவு நாளையொட்டி, சனிக்கிழமை மேலநாகையில் உள்ள மகாகவி பாரதியார் நினைவு மண்டபத்தில் உள்ள பாரதியார் சிலைக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக நாட்டுபுறவியல் துறைத் தலைவர் இரா.காமராசு,மன்னார்குடி வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.இயேசுதாஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாட்டத் தலைவர் செ.அண்ணாதுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கே.பிச்சைக்கண்ணு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலர் யு.எஸ்.பொன்முடி, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கிளைத் தலைவர் கே.வி.பாஸ்கர், எல்ஐசி அகில இந்திய முகவர் சங்க கிளை நிர்வாகி ராஜேந்திரன்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் பாரதி ஆர்.பூமிநாதன், மன்னார்குடி வணிகர் நலச் சங்க தலைவர் தாரகை செ.செல்வகுமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com