உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னையில் உள்ள நீர்நிலைகள் எத்தனை?: பாதுகாக்க என்ன நடவடிக்கை

ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், செம்மச்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்தில் பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கால்வாய் நீர் வழிகளுக்கு இடையூறுகளைக் கண்டறிந்து களைய வேண்டும். நீர் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து பாமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தவறினால் புத்தகங்களில் மட்டுமே கால்வாய்களைப் பற்றிய பதிவுகளைக் காணவேண்டி இருக்கும் என்று கருத்து தெரிவித்தது.

மேலும், சென்னையில் மொத்தம் எத்தனை நீர் நிலைகள் உள்ளது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், நீர்நிலைகளை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com