5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 

News image

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Updated On :14 செப்டம்பர் 2021, 5:55 pm IST

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட 28 அறிவிப்புகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதல்வரிடம் நாளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அறிக்கையை பரிசீலித்த பின்னர் முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார். 

மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. விருப்பமிருக்கும் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம். குழந்தைகளுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது, அவர்கள் பள்ளிக்கு வருவதே சிறந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியதன்பேரிலேயே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டன.

எனவே, பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கோவை மாவட்டத்தில் மிகவும் குறைவான மாணவர்களே வருகின்றனர். 

அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 87% பேர் பள்ளிக்கு வந்துள்ளனர்‌, குறைந்தபட்சமாக கோவை மாவட்டத்தில்‌ 67% மாணவர்கள்‌ பள்ளிக்கு வந்துள்ளனர்‌.

பள்ளிகள் திறக்கப்பட்டபிறகு 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலேயே உள்ளனர் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.