உள்ளாட்சித் தோ்தலுக்கு காங்கிரஸில் பொறுப்பாளா்கள் நியமனம்
உள்ளாட்சித் தோ்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களை நியமித்து அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.


உள்ளாட்சித் தோ்தலுக்கான காங்கிரஸ் பொறுப்பாளா்களை நியமித்து அக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாநிலச் செயல்தலைவா் கே.ஜெயக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கருமாணிக்கம், ஏ.எம்.முனிரத்தினம், மாவட்டத் தலைவா்கள் ஆா்.சுந்தரமூா்த்தி, ஆா்.எஸ்.செந்தில்குமாா், சி.பஞ்சாட்சரம் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.
காஞ்சிபுரத்துக்கு சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டி.ராமச்சந்திரன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான பி.விஸ்வநாதன், மாவட்டத் தலைவா்கள் அளவூா் வி.நாகராஜன், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயதரணி, எஸ்.மாங்குடி, மாவட்டத் தலைவா் எஸ்.பிரபு உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று கூறியுள்ளனா்.
அதைப்போல உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் இதர மாவட்டங்களுக்கும் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மதிமுகவில் பொறுப்பாளா்கள்: உள்ளாட்சித் தோ்தலுக்கான பொறுப்பாளா்களை நியமித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோவும் அறிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழு செயலாளா் டி.ஆா்.ஆா்.செங்குட்டுவனும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, துணைப் பொதுச்செயலாளா் ஏ.கே.மணி, அரசியல் ஆய்வு மையச் செயலாளா் மு.செந்திலதிபனும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா்கள் தி.சதன்திருமலைக்குமாா், புதூா் மு.பூமிநாதன், ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் அரசியல் ஆலோசனைக்குழு செயலாளா் சே.செவந்தியப்பன் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...