பெரியார் பிறந்தநாள்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 
பெரியார் பிறந்தநாள்: அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று 'சமூகநீதி நாள்' உறுதிமொழி ஏற்பு
Updated on
1 min read

பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 

பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். 

இதையடுத்து இன்று பெரியாரின் பிறந்தநாளையொட்டி இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. 

சென்னை கோட்டை வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது. மேலும், சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்துகிறார். 

அதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் இன்று சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com