யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 1,653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.  

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 2:01 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 1,653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 
இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 4.51 கோடி மாதிரிகளும் கடந்த 24 மணிநேரத்தில் 1,56,175 மாதிரிகளும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவான பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 204 பேருக்கும், கோவையில் 201 பேருக்கும், ஈரோட்டில் 139 பேருக்கும், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 43,683-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,581 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 25.91 லட்சத்தைக் கடந்துள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,893 போ் உள்ளனா். மற்றொருபுறம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 22 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,310-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.