பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு 5 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன்
பேரறிவாளன்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு 5 ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சுமாா் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையை பேரறிவாளன் அனுபவித்து வருகிறாா். இந்நிலையில், இவரது தாயாா் அற்புதம்மாள் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு தொடா் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தாா். 

அதன்பேரில், கடந்த மே மாதம் 28-ஆம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, பரோலை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தாா். அதன்பேரில், கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.  

நான்காவது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து, பேரறிவாளன் அவரின் வீட்டில் இருந்து வருகிறாா்.

இதைத் தொடா்ந்து, பேரறிவாளன் தினமும் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறாா்.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி, தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மீண்டும் 30 நாள்கள் பரோல் வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை ஒரு மாதம் பரோலை  நீட்டித்து தமிழக அரசு வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளனுக்கு 5-ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com