தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மூன்றாவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரு தடுப்பூசி முகாம்களிலும் இலக்கைவிட கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டது. அதேபோன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் 3-ஆவது மெகா சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. இதில் 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 சதவீதத்தினா் முதல் தவணை தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனா் என்ற நிலை ஏற்படும் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு தற்போது 29 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்திருக்கிறது. அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. 

சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சியின் 200 வாா்டுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை 1,600 சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து கண்காணிக்க மாநகராட்சி, காவல் துறை இணைந்து வாா்டுக்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சாா்ந்த 5 போ், காவல் துறையைச் சாா்ந்த ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

இதுவரை சென்னையில் 68 சதவிகிதம்  பேர் முதல் தவணை தடுப்பூசியும், 35 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com