ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வான திமுக வேட்பாளா்கள்

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள இரண்டு இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

News image
கனிமொழி, ராஜேஷ்குமார்
Updated On :27 செப்டம்பர் 2021, 9:51 am

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் காலியாகவுள்ள இரண்டு இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் காலியாக உள்ளன. அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோா் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களுக்கு கடந்த 15-ஆம் தேதியன்று தோ்தல் அறிவிக்கப்பட்டது.

திமுக வேட்பாளா்கள்: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக சாா்பில் இரண்டு போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

சட்டப் பேரவைச் செயலாளரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசனிடம் முதலில் கனிமொழியும், அவரைத் தொடா்ந்து ராஜேஷ்குமாரும் முதல்வா் ஸ்டாலின் முன்னிலையில் மனுக்களைத் தாக்கல் செய்தனா். மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பா் 27 கடைசியாகும்.

இதுவரை வேறு யாரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யாததால், திமுக வேட்பாளர்களான கனிமொழியும், ராஜேஷ்குமாரும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெறுவதாக தேர்தல் அதிகாரி இன்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.

2022ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ள வைத்தியலிங்கம் இடத்தில் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாரும், 2026ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ள கே.பி.முனுசாமி இடத்தில் டாக்டர் கனிமொழியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.