இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அக். 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:15 am

DIN


பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை வழக்கறிஞர்கள் உறுதி செய்யப்படாத நிலையில் இந்த வழக்கு அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

சிபிசிஐடி விசாரித்த இந்த வழக்கு பின்னா் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரன்பால், பாபு என்கிற பைக் பாபு உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.