
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படலாம் என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
ஆனால், பொதுமுடக்கமோ அல்லது ஊரடங்கு குறித்தோ தமிழக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது.
மக்களின் அச்சத்தை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயலும் சிலர், தமிழகத்தில் விரைவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட விருப்பதாகவும், எந்தப் பணிகளுக்கு அனுமதி, எந்தப் பணிகளுக்கு எல்லாம் தடை விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருப்பதாக ஒரு புகைப்படத்தை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர்.
ஆனால், அந்த தகவல் உண்மையல்ல என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அது வதந்தி என்றும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் இதுபோன்ற தகவல்கப் படித்து உண்மை என்று நம்ப வேண்டாம் என்றும், உண்மை என்று நம்பி அதனை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும் அறிய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.