நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 1986 -ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸில் விருதுநகர் மாவட்ட மாணவரணி செயலாளர், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மாணவரணி துணைத் தலைவர், தேசிய காங்கிரஸ் இளைஞரணி செயலாளர், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசணைக் குழு துணைச் செயலாளர், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான மாதவராவ் முதல் முறையாக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.