
திருப்பூர்: தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி, திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், விஸ்வேஸ்வரசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி திருப்பூரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை அதிகாலை முதலே திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை 5 மணி முதலே திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல, திருப்பூர் ஐயப்பன் கோயில், விஸ்வேஸ்வரசுவாமி கோயில், வீரராகவப் பெருமாள் கோயில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ள அனைத்து கோயில்களிலும் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஊத்துக்குளி அருகே உள்ள கதித்தமலை முருகன் கோயில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.