கூத்தாநல்லூர்: முகக்கவசம் அணியாத 220 பேரிடம் ரூ.42 ஆயிரம் அபராதம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், முகக்கவசம் அணியாமல் இருந்த 220 பேரிடம், ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
முகக்கவசம் அணியாத 220 பேரிடம் ரூ.42 ஆயிரம் அபராதம்
முகக்கவசம் அணியாத 220 பேரிடம் ரூ.42 ஆயிரம் அபராதம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், முகக்கவசம் அணியாமல் இருந்த 220 பேரிடம், ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, கண்ணுக்குத் தெரியாத வைரஸான கரோனா தொற்று சீனாவில் உருவானது. அமெரிக்கா, குவைத், இங்கிலாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட உலகத்தையே ஆட்டிப் படைத்து, அல்லல்பட வைத்தது. இந்நிலையில், கரோனா தொற்று 2ஆவது சுற்றாக, கரோனா சுனாமியாக மாறி, இரண்டாவது அலையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

விஸ்வரூபம் எடுத்த கரோனா தொற்று இந்தியாவில், தில்லி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது கரோனா தொற்று. தமிழகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. கரோனா தொற்றைத் தடுப்பதற்காக, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், ஆணையர் ஆர்.லதா தலைமையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கூத்தாநல்லூர் இந்தியன் வங்கியில் ஆய்வு செய்த ஆணையர் லதா
கூத்தாநல்லூர் இந்தியன் வங்கியில் ஆய்வு செய்த ஆணையர் லதா

கூத்தாநல்லூர் நகராட்சியில், 24 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, ப்ளீச்சிங் பவுடரும் தூவப்பட்டு வருகிறது. மேலும், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையார்கள் என நகராட்சிப் பணியாளர்கள் திருவாரூர் பிரதான சாலை, ஏ.ஆர். சாலை, மருத்துவமனை சாலை, மேலத்தெரு, மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். 

முகக்கவசம் அணியாமல் சாலையில் சென்றவர்கள், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்கள் என 220க்கும் மேற்பட்டவர்களிடம், ரூ.42 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கூத்தாநல்லூரில் கரோனாவை வளரவிடாமல் இருக்கவும், பாதுகாப்பைப் பின்பற்றச் சொல்லி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com