ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கேரளத்திலிருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்: அமைச்சர் தகவல்

கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு வருகிற 5 ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

News image
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Updated On :1 ஆகஸ்ட் 2021, 8:44 am

DIN

கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு வருகிற 5 ஆம் தேதி முதல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடு, வெளிமாநில பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் 13 நிமிடங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் அமலுக்கு வரவுள்ளது. 

Story image

கேரளத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து கேரளத்தில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. வருகிற 5 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தடுப்பூசி முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு பரிசோதனை கட்டாயமில்லை. 

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை காண்பித்தும் தமிழகத்திற்குள் வரலாம். ரயில் மூலமாக பயணம் மேற்கொள்வோருக்கும் இது பொருந்தும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.