சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது

சென்னையில் புதிதாக 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40,300-ஆக அதிகரித்துள்ளது.

News image
கரோனாவில் சென்னை மீண்டும் முதலிடம்: கோவையை முந்தியது
Updated On :11 ஆகஸ்ட் 2021, 2:21 pm

DIN

தமிழகத்தில் மாவட்டங்களில் சென்னையில் இன்று அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. சென்னையில் புதிதாக 243 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்து வந்த கோவையை சென்னை முந்தியுள்ளது.

சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 243 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,40,300-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 191 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், 2,048 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் புதிதாக 25,320 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 0.8-ஆக உள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 229 பேருக்கும், ஈரோட்டில் 167 பேருக்கும், செங்கல்பட்டில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.