மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை: பட்ஜெட் குறித்து ஜெயக்குமார்

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை: பட்ஜெட் குறித்து ஜெயக்குமார்

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று பட்ஜெட் குறித்து முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மக்களுக்கு டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழ்நாடு பட்ஜெட். வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு கடன், கடன் என்கின்றனர்.  

யானை பசிக்கு சோளப் பொரி போல தமிழக பட்ஜெட் உள்ளது. பரிசீலிக்கிறோம், குழு அமைக்கப்படும், ஆராயப்படும் என்றுதான் கூறுகிறார்கள். தெளிவான நிலை இல்லை. பெட்ரோல் மீதான வரியை பெயருக்கு ரூ.3 குறைத்துவிட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாகக் கூறி மாணவர்களை திமுக அரசு குழப்பிவிட்டது.

வெள்ளை அறிக்கை வெளியிட்டது அவசியமில்லாதது.  2011-ல் கஜானாவை காலி செய்து விட்டுதான் திமுக ஆட்சி சென்றது. 2011-ல் ஏற்பட்ட தாக்கம்தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீடித்தது. அடுத்து சொத்துவரி, பேருந்து, மின்கட்டண உயர்வு என எல்லாவற்றையும் கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com