தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் இல்லத்திற்கு சென்று ஆட்சியர் மரியாதை

தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் உள்ள தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் இல்லத்திற்கு  திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சென்று மரியாதை செலுத்தினார்.
தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ்.
தியாகி லட்சுமிகாந்தன் பாரதிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ்.

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் நயினாரகரத்தில் உள்ள தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் இல்லத்திற்கு  திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் சென்று மரியாதை செலுத்தினார்.

தென்காசியில் நடந்த சுதந்திர நாள் விழாவில், சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான லட்சுமிகாந்தன் பாரதி(95) கலந்து கொண்டார். ஆனால், அங்கு அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பான செய்தி கட்டுரை தினமணியில் திங்கள்கிழமை வெளியானது.

இதைத்தொடர்ந்து நயினாரகரத்தில் தியாகி லட்சுமிகாந்தன் பாரதியின் வீட்டிற்கு சென்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் (லட்சுமிகாந்தன் பாரதியின் முன்னோர்கள்) திருவுருவப் படங்களுக்கு ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படங்களுக்கு முன் ஆட்சியர்.
நயினாரகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படங்களுக்கு முன் ஆட்சியர்.

இதுகுறித்து லட்சுமிகாந்தன் பாரதி கூறியது; தென்காசியில் நடைபெற்ற சுதந்திரநாள் விழாவில் கலந்து கொண்டேன். என்னை மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்றார். சுதந்திர நாள் விழாவில் கொடியேற்றும் நிகழ்ச்சியை கண்டு பரவசமடைந்தேன் .வேறு எந்த வருத்தமும் எனக்கு இல்லை. இருப்பினும் மாவட்ட ஆட்சியர் என் வீட்டிற்கு வந்து என்னை கௌரவித்துள்ளார். மேலும் எனது குடும்பத்தைச் சேர்ந்த தியாகிகளுக்கும் அவர் மரியாதை செலுத்தி சென்றுள்ளார். தியாகிகளின் மீது அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com