
எடப்பாடி: எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், எடப்பாடி உழவர் சந்தை, தினசரி அங்காடி, பெரிய கடை வீதி, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வழக்கமாக நடைபெறும் வியாபார பணிகள் பாதிப்பிற்குள்ளானது.
அதிகாலை நேரத்தில் கொட்டிய கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் பால், காய்கறி வினியோகம் பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, மொரசபட்டி, வெள்ளரிவெள்ளி, பில்லு குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால், வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியது, பல்வேறு சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதையும் படிக்க | ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி: மக்கள் அதிர்ச்சி
மேலும் சனிக்கிழமை அன்று காலை நேரத்தில் பெய்த கனமழையால், எடப்பாடி பேருந்து நிலையப்பகுதியில் அலுவலகம் மற்றும் வழக்கமான பணிகளுக்கு செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.
தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எபப்பாடி பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியது.