கூத்தாநல்லூர்: எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், எரிவாயு உருளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கூத்தாநல்லூர்: எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
கூத்தாநல்லூர்: எரிவாயு உருளை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், எரிவாயு உருளை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் ஸ்ரீ ஜோதி இண்டேன் காஸ் ஏஜென்சீஸ் சார்பில், பொதக்குடி ஊராட்சி, சேகரை கிராமத்தில் நடத்தப்பட்ட எரிவாயு உருளை உபயோகிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு முகாமிற்கு, விநியோகஸ்தர் ஜோதிமணி ஏ.கே.எஸ். விஜயன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா பிச்சையன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஆர்.கண்ணன் வரவேற்றார். 

முகாமில், எரிவாயு உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு, இரண்டாவது எரிவாயு உருளை மற்றும் பாரதப் பிரதமரின் இலவச இணைப்பு குறித்தும், விநியோகஸ்தர் ஜோதி விஜயன் கூறியது, வாடிக்கையாளர்கள் எப்போதும் எரிவாயு உருளையை நிமிர்த்திதான் வைத்திருக்க வேண்டும். சாய்க்கக் கூடாது. கடுமையான காற்று வீசும் இடத்தில் காஸ் அடுப்பை வைக்கக் கூடாது. சமையலறையில் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய வேறு எந்தப் பொருளும் வைத்திருக்கக் கூடாது. சமைக்கும் போது அடுப்பின் அருகிலேயே இருக்க வேண்டும். காட்டன் உடையைத்தான் உடுத்தியிருக்க வேண்டும். சமையல் முடிந்த பிறகு உடனே ரெகுலேட்டரை அணைத்துவிட வேண்டும்.

அடுப்புக்கும், எரிவாயு உருளைக்கும் செல்லக் கூடிய குழாயை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும். அடுப்பை நீங்களாகவே பழுதுப் பார்க்கக் கூடாது. காற்றில் எரிவாயு வாடை வந்தால் மின் விளக்குகளையோ, தீக்குச்சிகளையோ ஏற்றக் கூடாது. உடனே ஜன்னல்களை திறந்து விடுங்கள். எரிவாயு கசிவது தெரிந்தால் பாதுகாப்பு மூடியைப் போட வேண்டும். எரிவாயுவை திறந்தவெளியில் வைத்து விட்டு, விநியோகஸ்தரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு இணைப்பு வைத்து இருப்பவர்கள் இரண்டாவது இணைப்புக்கான விண்ணப்பப் படிவத்தை உடனே கொடுக்கவும் என விளக்கமளிக்கப்பட்டது.

முகாமில், ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜலெட்சுமி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com