புதுவையில் 100% தடுப்பூசி போடப்பட்ட 41 கிராமங்கள்: தமிழிசை

புதுவையில் 41 கிராமங்களைச் சேர்ந்த 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுவையில் 100% தடுப்பூசி போடப்பட்ட 41 கிராமங்கள்: தமிழிசை
புதுவையில் 100% தடுப்பூசி போடப்பட்ட 41 கிராமங்கள்: தமிழிசை

புதுச்சேரி: புதுவையில் 41 கிராமங்களைச் சேர்ந்த 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகமும் பத்திரிகைத் தகவல் அலுவலகமும் இணைந்து இன்று(27-08-2021) நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டுப் பெருவிழா மற்றும் கோவிட்-19 தடுப்பூசியின் அவசியம் குறித்த விடியோ வேன்கள் பிரசாரத்தை புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை முன்வாசலில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜன்.

அப்போது அவர் பேசியதாவது, கோவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் புதுச்சேரி பல முன்னுதாரணங்களை நிகழ்த்தியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மாலை-இரவு நேர தடுப்பூசி முகாம்கள் புதுவையில்தான் நடத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணி முடிந்து வீடு திரும்பியபிறகு அவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக இத்தகைய இரவு நேர முகாம்கள் நடத்தப்பட்டன. தெருமுனை முகாம்கள், வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடுதல், தடுப்பூசி திருவிழாக்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு சிறப்பு முகாம்கள் எனப் பல வழிகளிலும் கடுமையான முயற்சிகள் எடுத்து தடுப்பூசி போடுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம். 

41 கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தடுப்பூசி பெறத் தகுதி வாய்ந்த 10 லட்சம் பேர்களில் இதுவரை சுமார் 7.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தியாகிவிட்டது. மீதம் உள்ளவர்களும் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசின் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகமும் பத்திரிகைத் தகவல் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வீடியோ வேன்களின் பிரசாரம் உதவியாக இருக்கும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com