சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகள்: தருமபுரம், மதுரை ஆதீனங்கள் அடிக்கல் நாட்டினர்

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுரம், மதுரை ஆதீனங்கள் அடிக்கல் நாட்டி திருப்பணியை தொடக்கி வைத்தனர்.
சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகள்: தருமபுரம், மதுரை ஆதீனங்கள் அடிக்கல் நாட்டினர்
சீர்காழி சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக பணிகள்: தருமபுரம், மதுரை ஆதீனங்கள் அடிக்கல் நாட்டினர்

சீர்காழி சட்டநாதர் கோயிலில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பணிகள் துவக்க விழா இன்று நடைபெற்றது. தருமபுரம், மதுரை ஆதீனங்கள் அடிக்கல் நாட்டி திருப்பணியை தொடக்கி வைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருநிலை நாயகி அம்பாள் உடனுறை - பிரம்மபுரீஸ்வரர் ஆலயமான இங்கு ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய இடமாகும். மூன்று தலங்களில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோணியப்பர், உமாமகேஸ்வரர் கோலத்திலும், அதற்குமேல் உள்ள மூன்றாவது தளத்தில்  சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் ஒரே ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். 

8 பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த ஆலயம் பைரவ க்ஷேத்திரம் ஆகக் கூறப்படுகிறது.  தேவாரம் பாடப் பெற்ற இந்த ஆலயத்தில் 1991ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரம் ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் இன்று அடிக்கல் நாட்டி துவங்கின. இதனை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.  

தொடர்ந்து ஆலயத்தின் ஈசானிய மூலையான வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். விழாவில் மதுரை ஆதீனம் 293வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்  மற்றும் திரளான முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர். 

இந்த திருப்பணியானது சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீர்காழி சட்டைநாதர் ஆலய கும்பாபிஷேக பணிகள் துவங்கி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com