கரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்-ஆப்பில் பெறுவது எப்படி? முழு விவரம்

கரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-ஆப்பில் பெறுவது முதல், கரோனா தடுப்பூசி செலுத்தும் போது கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தவறான தகவல்களை திருத்துவது வரை அனைத்தையும் நாம் வாட்ஸ் ஆப்பிலேயே செய்துவிட
கரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்-ஆப்பில் பெறுவது எப்படி? முழு விவரம்
கரோனா தடுப்பூசி சான்றிதழ் வாட்ஸ்-ஆப்பில் பெறுவது எப்படி? முழு விவரம்


கரோனா தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ்-ஆப்பில் பெறுவது முதல், கரோனா தடுப்பூசி செலுத்தும் போது கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் இருக்கும் பிழைகளை திருத்துவது வரை அனைத்தையும் நாமே செய்துவிடலாம்.

வாட்ஸ்-ஆப்பில் எவ்வாறு கரோனா தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பது முதல், கரோனா சான்றிதழில் உங்கள் செல்லிடப்பேசி எண், பெயரில் எழுத்துப் பிழை உள்ளிட்டவற்றையும் நீங்கள் கோவின் இணையதளம் மூலம் திருத்திக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்-ஆப் மூலமாகவும், கோவின் இணையதளம் வாயிலாகவும் நாம் என்னவெல்லாம் மேற்கொள்ள முடியுமோ அது பற்றிய முழுமையான விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

வாட்ஸ்-ஆப் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் பெற..

உங்கள் செல்லிடப்பேசியில் கரோனா உதவிமைய எண்ணான 90131 51515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணை வாட்ஸ் ஆப்பில் திறந்து அதில், ஆங்கிலத்தில் covid certificate என்று டைப் செய்து அனுப்புங்கள்.

'நீங்கள் அனுப்பிய எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த 6 இலக்க எண்ணை உள்ளிடவும் என்று ஒரு செய்தி வரும்.'

அதனைத் தொடர்ந்து செல்லிடப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபியை வாட்ஸ் ஆப்பில் பதிவிட வேண்டும்.

பிறகு, 'ஓடிபி எண் 30 வினாடிகளில் உறுதி செய்யப்படும்' என்று தகவல் வரும்.

அதனைத் தொடர்ந்து உங்கள் செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு நீங்கள் மட்டும் கரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்தால் உங்கள் ஒருவரின் பெயர் அல்லது இரண்டு மூன்று பேரின் பெயரை பதிவு செய்திருந்தால் அவர்களது பெயரும் வாட்ஸ்ஆப்பில் வரும்.

உங்களுக்கு உங்கள் ஒருவரின் சான்றிதழ் அல்லது மூன்று பேரின் சான்றிதழும் வேண்டும் என்றால், உங்களது பெயருடன் இருக்கும் எண் அல்லது 1-3 என உள்ளிடவும்.

உடனடியாக உங்களுடைய கரோனா தடுப்பூசி சான்றிதழ் பிடிஎஃப் வடிவில் உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் மெயின் மெனுவுக்குச் செல்லவும் வாய்ப்பளிக்கப்படும்.

அவ்வளவுதான் உங்களது கரோனா தடுப்பூசி சான்றிதழ் இப்போது உங்கள் செல்லிடப்பேசியில் வந்தாகிவிட்டது. இதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டாலும் போதும் அல்லது பிரிண்ட் எடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

இனி கோவின் இணையதளம் வாயிலாக பிழைகளைக் களைவது குறித்துப் பார்க்கலாம்..

செல்லிடப்பேசி எண்களை ஒன்றிணைப்பது:

ஒருவர் இரண்டு செல்லிடப்பேசி எண்களை வைத்திருப்பார். முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் போது ஒரு எண்ணையும், மற்றொரு தடுப்பூசி செலுத்தும் போது தவறாக மற்றொரு எண்ணையும் அளித்துவிடுவார். இதனால், இரண்டு தவணைகளுமே முதல் தவணை என்பது போல குறுந்தகவல் அனுப்பப்படும். இதனைக் களைய எளிய வழி உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் போது பயன்படுத்திய செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு கோவின் இணையதளத்துக்குச் சென்று அதில் ரைஸ் ஆன் இஷ்யூ (raise an issue) என்பதை க்ளிக் செய்யவும்.

அதில், எனது கரோனா தடுப்பூசி சான்றிதழை ஒன்றிணைத்து முழுமையான சான்றிதழ் பெற (மெர்ஜ் மை மல்டிபிள் டோஸ் சர்டிபிகேட்ஸ் டூ கெட் ஃபைனல் வேசினேஷன் சர்டிபிகேட்) பெற என்ற வாய்ப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

அதில் இந்த பக்கம் வரும். கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை உள்ளீடவும். முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல்களையும், இரண்டாவது தடுப்பூசி செலுத்தியதற்கான தகவல்களையும் சரியாக உள்ளீடு செய்து, சப்மிட் ரெக்வஸ்ட் என்பதை கிளிக் செய்யவும்.

பிறகு, உங்களுக்கு இரண்டு கரோனா தடுப்பூசி செலுத்தியது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் கிடைக்கும்.

செல்லிடப்பேசி எண்ணையே மாற்ற வேண்டுமா? வழி இருக்கிறது.

கோவின் இணையதளத்தில், நீங்கள் தடுப்பூசி செலுத்தும் போது பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு உள்ளே நுழையுங்கள்.

அங்கு ரைஸ் ஆன் இஷ்யூ என்ற பட்டனைக் கிளிக் செய்து, அதற்குள் செல்லிடப்பேசி எண்ணை மாற்றியமைக்க (டிரான்ஸ்ஃபர் எ மெம்பர் டூ நியூ மொபைல் நம்பர்) என்ற வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.

அப்போது இந்தப் பக்கம் விரியும். அதில், பயனாளருடைய பெயர் மற்றும் மாற்ற வேண்டிய செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவிட்டு, கன்டின்யூ என்பதை அழுத்தவும்.

செல்லிடப்பேசி எண் மாற்றப்பட்டதற்கான உறுதிப்படுத்தும் தகவல் வரும். ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு கரோனா தடுப்பூசி சான்றிதழில் பதிவேற்றப்பட்ட செல்லிடப்பேசி எண்ணை ஒரே ஒரு முறை தான் மாற்றியமைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கரோனா சான்றிதழில் இருக்கும் எழுத்துப் பிழைகளை எவ்வாறு களைவது?

கோவின் இணையதளத்தின் வாயிலாக, கரோனா தடுப்பூசி சான்றிதழில் இருக்கும் எழுத்துப் பிழை உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

அதற்கு, கோவின் இணையதளத்தில் ரைஸ் ஆன் இஷ்யூ என்பதை க்ளிக் செய்து, அதில், சான்றிதழில் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்ள (கரெக்ஷன் இன் மை சர்டிஃபிகேட் ரிகார்டிங் நேம்/ஏஜ்/ஜென்டர்/போட்டோ ஐடி) என்பதை கிளிக் செய்யவும்.

அதை க்ளிக் செய்ததும், அந்த நபரின் விவரங்கள் கொண்ட பக்கம் வரும். அதில் எந்த விவரம் தவறாக இருக்கிறதோ அதை மாற்றம் (சேஞ்ச்) செய்து கொள்ளலாம். நினைவில் கொள்ளுங்கள், இதிலிருக்கும் விவரங்களில் ஏதேனும் இரண்டு விவரங்களில் மட்டுமே பிழைதிருத்தம் செய்ய முடியும். திருத்தம் செய்ததும் கன்டின்யூவை கிளிக் செய்யவும். நீங்கள் மேற்கொண்ட பிழைதிருத்தம் உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் வரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com