விவசாய சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: இந்தியக் கம்யூ. வரவேற்பு

விவசாய சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.  
விவசாய சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: இந்தியக் கம்யூ. வரவேற்பு

விவசாய சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. 
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாஜக மத்திய அரசு கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றிய விவசாயிகள் விரோத, வேளாண் வணிக சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஒன்பது மாதமாக போராடி வருகிறார்கள். இதன் மீது தலையிட்டு தீர்வுகாண வேண்டிய ஒன்றிய அரசு வேளாண் வணிக சட்டங்களை அமலாக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்டி வருகிறது. 
இச்சட்டங்கள் விவசாயிகள் வாழ்வாதாரத்தை வேரோடு பிடுங்கி எறிந்து, அவர்களை பன்னாட்டு கார்ப்ரேட் சக்திகளின் ஆளுகைக்குள் அடிமைப்படுத்தும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், “விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்” என விவசாயிகள் உறுதி காட்டி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.
நாடாளுமன்ற நடைமுறைகளை நிராகரித்து, ஜனநாயக நெறிமுறைகளை அலட்சியப்படுத்தி வரும் பாஜக ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கை எதிர்த்து மக்களின் ஆதரவை திரட்டும் முறையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு முழுவதும் ஊர்தோறும் மக்கள் நாடாளுமன்றக் கூட்டம் என்ற இயக்கத்தை நடத்தி வருகின்றது. இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அமைச்சரவை செயலாளருக்கு அனுப்பப்படுகின்றது. 

இதனைத் தொடர்ந்து அஇஅதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை பண்ணைகள் மற்றும் சேவைகள் (ஊக்கப்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்துதல் சட்டம் 2019 ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பப் படுகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் திமுகழகம் அளித்த உறுதிமொழியின் படி விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியிருப்பதும், முந்தைய அஇஅதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் விரோத சட்டத்தை நீக்கவும் செய்யும் சட்டம் நிறைவேற்றி இருப்பதும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் ஜனநாயக நடவடிக்கையாகும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்று, பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com