பள்ளிகள் திறப்பு: பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நாளை 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு: பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அன்பில் மகேஷ்
பள்ளிகள் திறப்பு: பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அன்பில் மகேஷ்


சென்னை: தமிழகத்தில் நாளை 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நாளை பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளி ஒன்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதையும் படிக்கலாமே.. கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிழையா? சரி செய்ய வழி இருக்கு

அப்போது அவர் கூறுகையில்,  செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

முதல்கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வருவாய்துறை சார்பில் நெறிமுறைகள் வெளியிட்டுள்ளோம். பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுளள்து.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் வரும் போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும். ஒரு வேளை முகக்கவசம் கிழிந்துவிட்டால், அவர்களுக்கு மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில், ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம்.

அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் அக்கறை எடுத்து அவர்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு முகக்கவசங்கள் வழங்க முன்வரலாம் என்று முதல்வர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளிகளில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். பள்ளி வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 5 வகுப்புகள், காலை 9.30 மணிக்குத் தொடங்கி, அனைத்துப் பள்ளிகளும் மாலை 3.30 மணிக்குள் வகுப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் தற்போதைக்கு விளையாட்டு நேரம் கிடையாது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம். அனைவருமே பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயமில்லை. பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com