பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு கத்தி வெட்டு

ரெட்டிச்சாவடி அருகே தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கத்தியா வெட்டிவிட்டு, அவர் கையில் வைத்திருந்த பணப்பையில் இருந்த ரூ.1200-ம் கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.
தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியவர்கள்.
தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடியவர்கள்.

கடலுார்: கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே தனியார் பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கத்தியா வெட்டிவிட்டு, அவர் கையில் வைத்திருந்த பணப்பையில் இருந்த ரூ.1200-ம் கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகில் உள்ள பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் கடலூரிலிருந்து புதுச்சேரி நோக்கி தனியார் பேருந்து நேற்று செவ்வாய்கிழமை இரவு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அந்த பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்கு என்பவரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கொடுவா கத்தியால் ஓட்டுநரின் முழங்கையில் வெட்டியுள்ளனர். மேலும், பேருந்தின்  கண்ணாடிகளையும்  அடித்து உடைத்து சேதபடுத்தியதோடு தடுக்க வந்த பேருந்து நடத்துநர் நவீன்குமாரையும் தாக்கினர். பின்னர் அவர் கையில் வைத்திருந்த பணப்பையில் இருந்த ரூ.1200-ம் கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர்.

ஓடும் பேருந்தை வழிமறித்து கொள்ளை நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவலறிந்த கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர், மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான தனிப்படையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 

இதற்கிடையில் தாக்குதல் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.
தீவிர விசாரணை நடத்திய தனிப்படையினர் இன்று புதன்கிழமை காலை கடலூர் வட்டம் பெரியகாட்டுப் பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் பிரித்தி (எ) பிரித்விராஜன்,  கதிர்வேல் மகன் சீனுவாசன், புதுச்சேரி மாநிலம் பாகூரைச் சேர்ந்த வேம்பன் மகன் மருது (எ) மருதுநாயகம்  ஆகிய மூவரையும் மடக்கி பிடித்து அவர்கள் பயன்படுத்திய கொடுவா கத்தி,  இரண்டு இரு சக்கர வாகனங்களை கைப்பற்றியதோடு  மூவரையும் கைது செய்தனர். 

எஸ்.பி.எச்சரிக்கை:
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன் தெரிவித்ததாவது: கடலூர் மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட கிராமங்களில் உள்ள நபர்கள் புதுச்சேரி மாநில ரவுடிகளுடன் சேர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com