ஸ்ரீரங்கம் 9-ம் நாள் உற்சவம் (படங்கள்)

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் பகல்பத்து 9-ம் திருநாளை முன்னிட்டு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீரங்கம் 9-ம் நாள் உற்சவம் (படங்கள்)


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் பகல்பத்து 9-ம் திருநாளை முன்னிட்டு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து நாளன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் எழுந்தருளும் நம்பெருமாளுக்கு வைரம்,  வைடூரியம், முத்து, பவளம் என பலவிதமான ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன.

பகல்பத்து உற்சவத்தின் 9-ம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை, நம்பெருமாள் முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், முத்தங்கி, முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம் வந்து அர்ச்சுன மண்டபத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளினார்.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் நம்பெருமாளை வழிபட்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com