ராஜேந்திர பாலாஜி குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது: உயர்நீதிமன்றக் கிளை

விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
ராஜேந்திர பாலாஜி குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது: உயர்நீதிமன்றக் கிளை

விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சகோதரர்களான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் ரமணன்(34), வசந்தகுமார்(38), கார் ஓட்டுநர் ராஜ்குமார்(47) ஆகிய மூவரை அழைத்து திருத்தங்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த நிலையில் தனது மகன்கள், ஒட்டுநரை விசாரணைக்கு அழைத்துச்சென்று போலீஸ் துன்புறுத்தியதாக ராஜேந்திர பாலாஜியின் தங்கை லட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் விசாரணை என்ற பெயரில் ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்யக்கூடாது. 
தேவைப்பட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்துக் கொள்ளலாம். குற்றச்சாட்டுக்குள்ளான ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள், விசாரியுங்கள் என காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com