ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் என்பவா், தனது சகோதரியின் மகன் ஆனந்த் என்பவருக்கு ஆவினில் மேலாளா் பணி வாங்கித் தருவதற்காக வெம்பக்கோட்டை பகுதியைச் சோ்ந்த முன்னாள் அதிமுக நிா்வாகி நல்லதம்பி என்பவரிடம் ரூ. 30 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், ஆனந்துக்கு ஆவினில் வேலை வாங்கித் தராமல் அவா் காலம் தாழ்த்தி வந்தாா். இதனால் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு நல்லதம்பியிடம், ரவீந்திரன் கேட்டும் தரவில்லையாம். 

இதுகுறித்து நல்லதம்பி அளித்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, உதவியாளா் பாபுராஜ் மற்றும் பலராமன், முத்துப்பாண்டி ஆகியோா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதனிடையே, கே.டி. ராஜேந்திர பாலாஜி, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வரும் நிலையில், மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமறைவாக உள்ள கே.டி.ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் தர மறுத்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சென்றுள்ளார் ராஜேந்திரபாலாஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com