கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கோலாகலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கோலாகலம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் இயேசுவின்
பிறப்பை நினைவு கூறும் வகையில், குழந்தை இயேசுவின் சிலைக்கு ஆராதனை நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்துவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

இதேபோல் குளச்சல், புத்தளம், மணக்குடி, தக்கலை, இரணியல், கன்னியாகுமரி, முட்டம், திங்கள் நகர், கருங்கல், மார்த்தாண்டம், களியக்காவிளை, குலசேகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com