பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திரைப்பட பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திரைப்பட பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திரைப்பட பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் (77), உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். 1943-ஆம் ஆண்டு டிச.10-ஆம் தேதி மயிலாடுதுறையில் பிறந்த மாணிக்க விநாயகம், பரதநாட்டிய ஆசிரியா் வழுவூா் பி. ராமையா பிள்ளையின் இளைய மகனாவாா். 
எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகப் பணியாற்றியுள்ளாா். ‘தில்’, ‘திருடா திருடி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளாா். இவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இந்த நிலையில் சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணிக்க விநாயகம் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். 

முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றார். மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார். அஞ்சலி செலுத்திய பின் மாணிக்க விநாயகம் குடுத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். 
முன்னதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘எண்ணூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி, துன்பமானாலும் துள்ளலானாலும் தனது குரல்வளத்தால் அவ்வுணா்வுகளைத் துல்லியமாக ரசிகா்களுக்குக் கடத்தி விருந்தளித்தவா் மாணிக்க விநாயகம். 
அவரது தந்தை மற்றும் அண்ணனைப் போலவே, திமுக தலைவா் கருணாநிதி மீதும் என் மீதும் அளவற்ற அன்பைப் பொழிந்த அவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கலையுலகத்தைச் சோ்ந்தவா்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com