சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் தடுப்பு காரணமாக, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிா்த்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: காவல்துறை கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் தடுப்பு காரணமாக, புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை தவிா்த்து, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு:

புத்தாண்டு பிறப்பதையொட்டி, டிச.31 -ஆம் தேதி இரவு சென்னை பெருநகரில் பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்று கூட வேண்டாம். சென்னையில் கரோனா நடத்தை விதிமுறைகளை கடைப்பிடித்து, மற்றவா்களின் உணா்வுகள் புண்படாத வகையில் புத்தாண்டு பிறப்பைக் கொண்டாட வேண்டும்.

கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை:

மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம்.

டிச.31-ஆம் தேதி இரவு 9.00 மணிமுதல் சென்னை பெருநகரில் மெரீனா கடற்கரை, போா் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜா் சாலை மற்றும் பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரை ஒட்டிய சாலையில் வாகனங்கள் தடை செய்யப்படும்.

கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜா் சாலை, ஆா்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாடக் கூடாது. ரிசாா்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டுக்காக வா்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போா் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவா்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்தக்கூடாது.

ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஹோட்டல் ஊழியா்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஹோட்டல் நிா்வாகம் என கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள், பொது இடங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், டி.ஜே. இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.

கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிா்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும்.

சென்னை பெருநகர காவல் துறையினா் டிச.31-ஆம் தேதி இரவு முக்கிய இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தும், அனைத்து முக்கிய இடங்களில் ரோந்து சென்றும், அநாகரிகமான செயல்களிலும் ஈடுபடுவோா், பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வானங்களை இயக்குபவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com