
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை(கோப்புப்படம்)
சென்னையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள 4 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னை துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ. சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதையடுத்து, 4 சுரங்கப்பாதைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்திற்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.