திமுகவில் விருப்ப மனு அளிக்க பிப்.28 வரை கால அவகாசம்

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் பிப்.17-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்.28 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் விருப்ப மனு அளிக்க பிப்.28 வரை கால அவகாசம்
திமுகவில் விருப்ப மனு அளிக்க பிப்.28 வரை கால அவகாசம்

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் பிப்.17-ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்.28 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், நடைபெறவிருக்கும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப் 17 முதல் 24 வரை விண்ணப்பித்திட வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கட்சித் தலைவரிடம் வைத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த அவகாசம் பிப்.28 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.17 முதல் விருப்ப மனு பெற்றுத் தரலாம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்திருந்தாா்.

அதன்படி, அறிவாலயத்தில் ஏராளமானோா் மனுக்களைப் பெற்றுச் சென்றனா். மனுக்களைத் தரும்போது பொதுத் தொகுதியில் போட்டியிடுவோா் ரூ.25 ஆயிரமும், மகளிரும், தனித் தொகுதியில் போட்டியிடுவோரும் ரூ. 15 ஆயிரமும் கட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுக்களைப் பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவகாசம் பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com