
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
புது தில்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது.
புது தில்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார்.
தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது நடைபெறும், தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்று வெளியாக உள்ளது.
இதையும் படிக்கலாமே.. 'சாகும்வரை பேச்சினால் மக்களைத் தட்டி எழுப்புவேன்': மதுரையில் தா.பாண்டியனின் உருக்கமான கடைசிப் பேச்சு
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில், இன்று மாலை முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை புது தில்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...