
மு.க.ஸ்டாலின்.
தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் டி.ஆா்.பாலு தலைமையில் குழு அமைத்து அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் நேற்று அமைத்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தொகுதிப் பங்கீட்டு குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.