
முன்னாள் எம்.எல்.ஏ., பழ.கருப்பையா கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி வேட்பாளராக முன்னாள் எம்.எ.ஏ., பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகக் கூறினார்.
கல்லுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக போராடி சிறைக்குச் சென்றவர் பழ.கருப்பையா என்று புகழாரம் சூட்டினார்.
மக்கள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனு அளித்துள்ளதாகவும், இதற்காக மார்ச் 1-ம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...