
சென்னை ஐஐடியில் தற்காலிக ஊழியர் தற்கொலை? எரிந்த நிலையில் சடலம்
சென்னை ஐஐடியில் நேற்று இரவு பாதி எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சடல்ம் இளைஞர் உன்னிகிருஷ்ணன் நாயர் (22) என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் ஐஐடியில், பிராஜெக்ட் அசோசியேட் பணியில் தற்காலிக ஊழியராக இணைந்ததும் தெரிய வந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்: ஐவர்மேக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?
சென்னை கிண்டி ஐஐடி ஹாக்கி மைதானத்தில் மாணவா்கள் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தின் ஓரத்தில் ஒரு இளைஞா் சடலம் எரிந்த நிலையில் கிடந்தது.
கோட்டூா்புரம் போலீஸாரின் விசாரணையில் அந்த இளைஞா், கேரள மாநிலம் எா்ணாகுளம் ரகு மகன் உன்னிகிருஷ்ணன் (22) என்பதும், அவா் ஐஐடியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்ததும், வேளச்சேரியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இறந்த உன்னிகிருஷ்ணனின் தந்தை ரகு, இஸ்ரோ விஞ்ஞானியாக இருப்பதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.