திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

தமிழகத்தில் திருச்சி, தேனி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்யும்
திருச்சி, சேலம் உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்யும்

தமிழகத்தில் திருச்சி, தேனி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், ஈரோடு, திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 1 அல்லது 2 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: 

வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கனமழையும் தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

நாளை(ஜூலை 10) மற்றும் நாளை மறுநாள்(ஜூலை 11) தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக்கனமழையும் திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஈரோடு, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

மேலும் நாளை முதல் 12 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் மலை ஏற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com