
அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் 11 பேர் பாதிப்பு
சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்றின் கோரத் தாண்டவம் மெல்ல ஓய்ந்து வருவது போல இருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.
இதையும் படிக்கலாமே.. கரோனாவைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் டெங்கு, டைபாய்டு
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,
சென்னையில் கடந்த 13 நாள்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.