
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அதிமுகவினர்.
ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கினைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி எடப்பாடி பகுதியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொங்கணாபுரம் ஓமலூர் பிரதான சாலையில், ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும், டீசல் பெட்ரோல் விலை குறைத்திட வலியுறுத்தியும், நிகழ் ஆண்டிலேயே நீட் தேர்வினை ரத்து செய்ய கோரியும், குடும்பத் தலைவி உதவித் தொகையை உடனடியாக வழங்கிட கோரியும், திரளான அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.