ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை விரைவில் அறிவிப்பு: அமைச்சர் தகவல்

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கோப்புப்படம்

Published On :

பிளஸ் 2 மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து குழுவை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

மேலும், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றது. 

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 

12 ஆம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து விரைவில் வெளியிடப்படும். இது அனைத்து தரப்பினரும் ஏற்கக்கூடியதாக இருக்கும். 

அதேபோன்று  பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விட்டது. அதுவும் விரைவில் வெளியிடப்படும். 

தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசனை செய்தோம். 

நீட் எந்த காரணத்தை கொண்டும் தமிழகத்தில் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.